
பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருந்துளைக்கு எஸ்ஜிஆர்-ஏ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந்துளையின் புகைப்படத்தை வானியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஓர் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.