“குடும்பம் என்பது பாரம் அல்ல. அது ஒரு வரம்”  ஒப்போசம் விலங்கின் தாய்ப்பாசம் - வைரல் வீடியோ

“குடும்பம் என்பது பாரம் அல்ல. அது ஒரு வரம்” ஒப்போசம் விலங்கின் தாய்ப்பாசம் - வைரல் வீடியோ

“குடும்பம் என்பது பாரம் அல்ல. அது ஒரு வரம்” ஒப்போசம் விலங்கின் தாய்ப்பாசம் - வைரல் வீடியோ
Published on

“குடும்பம் என்பது பாரம் அல்ல. அது ஒரு வரம்” என்பதை ஆறறிவு படைத்த  மனிதர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் ஒப்போசம் விலங்கு ஒன்று அதன் குடும்ப உறுப்பினர்களை (குட்டிகள்) சுமந்து செல்லும் காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. அந்த காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் இந்த வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான வியூஸ்களை அள்ளியுள்ளது. ஒவ்வொருவரும் அருமை என இந்த வீடியோவுக்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் போட்டு தெறிக்க விடுகின்றனர். 

அந்த வீடியோவில் உள்ள விலங்கு தனது குட்டிகளை முதுகில் சுமந்தபடி கடந்து செல்கிறது. அது பார்க்கவே அழகாக உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விலங்கின் பெயர் ஒப்போசம் என தகவல்  கிடைத்துள்ளது. பாலூட்டி இனத்தை சேர்ந்த இந்த ஒப்போசம் உலகின் மேற்கு அரைக்கோளப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் இது அதிகம் வாழுமாம்.

இதனை அங்குள்ள தீவுகளில் அதிகமாக வேட்டையாடப்படுவதும் வாடிக்கையாம். அதிகபட்சமாக பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்குமாம் இந்த ஒப்போசம். அதன் பெயரை போலவே தனது குடும்பத்தின் மீது ரொம்ப பாசம் வைத்துள்ளது ஒப்போசம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com