முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானைகள் சவாரியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட கடந்த 2ஆம் தேதி திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வனப்பகுதிக்குள் வாகன சவாரி மேற்கொள்ளவும், யானைகள் முகாமை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் யானைகள் சவாரி வரும் 6ஆம் தேதி துவங்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதுமலைக்கு சுற்றுலா வந்த பலரும் யானை சவாரி மேற்கொள்ள அதிக விருப்பம் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஏற்கனவே அறிவித்த தேதியை விட முன்கூட்டியே சுற்றுலா பயணிகள் யானை சவாரி மேற்கொள்ள வனத்துறை அனுமதி அளித்தது. அதன்படி முதுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் யானை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com