Eco India: ஓடிக்கொண்டே குப்பைகளையும் அகற்றும் புதுமை

Eco India: ஓடிக்கொண்டே குப்பைகளையும் அகற்றும் புதுமை
Eco India: ஓடிக்கொண்டே குப்பைகளையும் அகற்றும் புதுமை

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

இந்திய தெருக்களில் பொதுமக்கள் நாள் ஒன்றுக்கு தூக்கியெறியும் 25 ஆயிரம் டன் குப்பைகளை அகற்றுவது என்பது இமாயலப்பணிதான். ஆனால் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இணைந்து தினமும் இந்த குப்பைகளை அகற்றுவதற்காக ஓடுகின்றனர். இப்படியான ஒரு பயற்சி ஸ்வீடனில்தான் தொடங்கப்பட்டது. எப்படி ஓடுவதை ஜாக்கிங் என்று அழைக்கிறோமோ அதைபோல குப்பைகளை பொறுக்குவதை ஸ்வீடன் மொழியில் பிளாக்கிங்(Plogging) என்று அழைக்கின்றனர். குப்பையை பொறுக்குவது கேவலமானது என்ற இந்திய பார்வையை நீக்கமுடியும் என்று இதன் அமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

தெருக்களில், பூங்காக்களில் குப்பையை எடுக்கவரும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களை குப்பைபொறுக்குபவர்கள் என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஆனால் பிளாக்கிங் செய்பவர்களின் பணி பிரகடனம் என்னவென்றால் மற்றவர்கள் தூக்கிப்போடும் குப்பைகளை நீக்கி சுத்தமான இந்திய தேசத்தை உருவாக்குவது என்பதுதான். ரிப்புதான் இந்தியாவில் பிளாக்கிங் செய்வதில் முதன்மையானவர். அவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர். 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான குப்பைசேகரிப்பு மையத்தை உருவாக்கியிருக்கிறார். தூய்மையான நகரங்களை உருவாக்குவற்கு ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் முக்கியம் என்ற விழிப்புணர்வை விதைத்து வருகிறார்.

மகாராஷ்டிராவின் அசுத்தமான நகரங்களில் ஒன்று பூனே. ஆனால், அர்ப்பணிப்புள்ள குப்பை அகற்றும் இயக்கம் அந்த நகரத்தை மாற்ற கடினமாக உழைக்கிறது, விவேக் குராவ் என்ற மாணவர்தான் இந்த அமைப்பை உருவாக்கினார். அவரது குழு இன்று சுமார் இரண்டாயிரத்து ஐநூறு உறுப்பினர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறது. பெரும்பாலான மக்கள் நாம்தான் வரி கட்டுகிறோமே, அதனால் குப்பையை அகற்றுவது அவர்களுடைய கடமை. அதை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். உறுதிப்பாடு கலந்த சுற்றுச்சுழல் செயல்பாட்டாளர்களாக ரிப்புவும் விவேக்கும் இருந்தபடியால் அவர்களை பலரும் பின்பற்ற தொடங்கினர். ஆனால் பூனேவில் அவர்கள் குப்பைகளை மட்டும் சேகரிப்பது இல்லை, அதோடு சில நற்செயல்களையும் செய்கின்றனர்.

சேகரிக்கும் குப்பைகளிலிருந்து மறு சுழற்சிக்கேற்றவைகளை தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். அதோடு சேகரிக்கும்போது பல வடிவங்களில் கண்ணாடி பாட்டில்கள் கிடைக்கும். அவற்றை வீட்டு அலங்காரப்பொருளாக மாற்றிவிடுகின்றனர். இதற்காக பூனேவிலுள்ள ஊரகப்பகுதிப் பெண்களுக்கு கைவினைப்பொருள்கள் செய்வதற்கான பயிற்சியும் கொடுக்கின்றனர். இந்த அலங்கார பாட்டில்களை விற்பதன்மூலம் பெண்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்த முயற்சிகள் சூழலைக் காப்பதற்கான ஆதரவை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. பெரும்பாலான நகர்புற தன்னார்வலர்கள் நெகிழிக்கழிவுகளை அகற்ற ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் உள்ளனர். இப்போது இவற்றை அகற்றாவிட்டால் அவை குறைந்தபட்சம் 450 வருடங்கள் அழியாது என்பதால் அதை செயல்படுத்த காலம் தாமதிக்கக்கூடாது என்கின்றனர் இவர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com