சாக்லேட் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும் எனவும், மனநிலை சிறப்பாக இருக்கும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, டென்மார்க் பான்ஸ்டனில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் பெத் இசுரேல் டிகோனஸ் மருத்துவ மைய பேராசிரியர்கள் குழு, விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. ஆய்வின் முடிவில், கருப்பு நிறத்திலான கோகோ அதிகம் கலந்த சாக்லேட் சாப்பிடுவோருக்கு, இதய செயல்பாடு சீராகவும், இயல்பாகவும் உள்ளது என தெரியவந்தது. மேலும் ரத்த ஓட்டமும் இயல்பு நிலையில் காணப்பட்டதாகவும், இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்திருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.