30 ஆண்டுகளில் பூமியில் 28 டிரில்லியன் டன் பனிப்பாறைகள் உருகின: விஞ்ஞானிகள்

30 ஆண்டுகளில் பூமியில் 28 டிரில்லியன் டன் பனிப்பாறைகள் உருகின: விஞ்ஞானிகள்

30 ஆண்டுகளில் பூமியில் 28 டிரில்லியன் டன் பனிப்பாறைகள் உருகின: விஞ்ஞானிகள்

1994-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 28 டிரில்லியன் டன் பனிப்பாறைகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து மறைந்துவிட்டது. புவியின் துருவங்கள், மலைகள் மற்றும் பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த அதிர்ச்சியூட்டும் முடிவை வெளியிட்டுள்ளனர். புவி வெப்பமயமாதல்தான் இந்த பனி உருகுதலுக்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்த ஆய்வினை செய்தவர்கள். பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமாக கடல்நீர் மட்டம் உயர்வது தூண்டப்படுகிறது,இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல்நீர்மட்டம் ஒரு மீட்டர் உயரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

"ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல்நீர் மட்ட உயர்வால் ஒரு மில்லியன் மக்கள் தங்கள் தாழ்வான வாழ்விடங்களிலிருந்து இடம்பெயரும் சூழல் உருவாகும்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மற்றும் மாடலிங் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறினார். பனிப்பாறைகள் உருகுவதனால் உருவாகும் குளிர்ந்த புதிய நீர் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் நீரின் உயிரியல் ஆரோக்கியத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகளின் இழப்பு உள்ளூர் நீர் ஆதாரங்களை அழிக்கிறது. கடந்த காலங்களில் ஆராய்ச்சியாளர்கள் பனி உருகும் அண்டார்டிக் அல்லது கிரீன்லாந்து போன்ற தனிப்பட்ட பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர். ஆனால் புவியின் முழுமையான பரப்பிலிருந்தும் மறைந்து கொண்டிருக்கும் அனைத்து பனிப்பாறை பரப்புகளையும் ஆய்வுசெய்வது இதுவே முதல் முறை

விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த வெப்ப உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் வானிலை அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 1980-89 ஆகிய பத்தாண்டுகளுக்கும், 1990-1999 ஆகிய பத்தாண்டுகளுக்கும் இடையில் உலக வெப்பநிலையில் 0.14 சி அதிகரிப்பு இருந்தது, பின்னர் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையில் 0.2 சி அதிகரிப்பு இருந்தது. இந்த அதிகரிப்பு விகிதம் அடுத்த பத்தாண்டுகளில் 0.3C ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். புவியின் வெப்பநிலை உயர்வு, பனிக்கட்டி உருகுதல், கடல்நீர்மட்டம் உயருதல் போன்றவை சங்கிலித்தொடர் நிகழ்வுகள் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com