\
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை... அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை... அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை... அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்
Published on: 

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இன்று முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com