காற்று மாசு: குருகிராம்,ஃபரிதாபாத்,சோனிபட் பகுதிகளில் நவம்பர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசு: குருகிராம்,ஃபரிதாபாத்,சோனிபட் பகுதிகளில் நவம்பர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசு: குருகிராம்,ஃபரிதாபாத்,சோனிபட் பகுதிகளில் நவம்பர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

காற்று மாசு அதிகரித்துள்ள காரணத்தினால் வரும் 17-ஆம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது ஹரியானா அரசு. டெல்லி அரசு முன்னதாக ஒரு வாரம் பள்ளிகளுக்கு காற்று மாசு காரணமாக அறிவித்திருந்தது. 

மேலும் வரும் 17-ஆம் தேதி வரையில் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்துள்ளது அந்த மாநில அரசு. அதே போல அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ மோடில் வீட்டில் இருந்த படி பணி செய்யும்படி சொல்லியுள்ளது.

இதே அறிவிப்பை டெல்லி அரசும் வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று அதிகளவு மாசடைந்துள்ளது. நீதிமன்றமும் இது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com