முதுமலையில் கடுமையான வறட்சி!

முதுமலையில் கடுமையான வறட்சி!

முதுமலையில் கடுமையான வறட்சி!
Published on

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இந்த ஆண்டு போதுமான அளவில் கோடை மழை பெய்யவில்லை. இதனால் வனத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வனத்தின் புற்தரைகள் காய்ந்தும், மரங்களின் இலைகள் உதிர்ந்தும் எழும்பு கூடுகள் போல காட்சி அளிக்கின்றது.

வனத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வனப்பகுதி காய்ந்து காணப்படுவதால் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com