அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சையையும் சேர்த்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காலம் வருகிற 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது 2021-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை சேர்க்கப்பட்டு அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெறும் நிலையில், வென்டிலேட்டர் பயன்படுத்தாத நிலையில் நாள்ஒன்றுக்கு ரூ.6,500-ம், வென்டிலேட்டர் பயன்படுத்தினால் ரூ.8,500-ம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைக்கு வழங்கும். இதற்காக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 கோடியையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2.5 கோடியையும் தொகுப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது