கொரோனா பரிசோதனை: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா நெகட்டிவ்

கொரோனா பரிசோதனை: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா நெகட்டிவ்
கொரோனா பரிசோதனை: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா நெகட்டிவ்

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்க்கப்படும் யானைகளுக்கு கொரோனா நோயத் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது.

சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 28 யானைகளுக்கும் கடந்த 8 ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் முதுமலையில் பராமரிக்கப்படும் 28 யானைகளுக்கும் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை பெறப்பட்டிருக்கிறது. யானைகளுக்கு நோய் தொற்று இல்லை என அறிக்கை வந்தாலும் முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌஷல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com