\
நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை: சாலையோரங்களில் உருவாகியுள்ள புதிய நீர்வீழ்ச்சிகள்

நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை: சாலையோரங்களில் உருவாகியுள்ள புதிய நீர்வீழ்ச்சிகள்

நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை: சாலையோரங்களில் உருவாகியுள்ள புதிய நீர்வீழ்ச்சிகள்
Published on

தொடர் கனமழை காரணமாக சாலையோரங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அவ்வப்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் பந்தலூர், ஓவேலி, உதகை உள்ளிட்ட சாலையோரங்களில் புதிய நீர்வீழ்ச்சி உருவாகி பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.

கனமழை காலங்களில் மட்டுமே இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும். வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதி கிடையாது. எனவே இவ்வழியாக செல்பவர்கள் புதிய நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com