கோவை: மீண்டும் ஊருக்குள் உலாவந்த பாகுபலி காட்டு யானை - கவலையில் விவசாயிகள்

கோவை: மீண்டும் ஊருக்குள் உலாவந்த பாகுபலி காட்டு யானை - கவலையில் விவசாயிகள்

கோவை: மீண்டும் ஊருக்குள் உலாவந்த பாகுபலி காட்டு யானை - கவலையில் விவசாயிகள்
Published on

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாகுபலி என்ற காட்டு யானை மீண்டும் உலா வர துவங்கியுள்ளது. இது வனத் துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள புதர் காடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முகாமிட்ட ஒற்றை ஆண் காட்டு யானையொன்று அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதுமாக இருந்தது.இதனால் பாகுபலி யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கவும் இதன் மூலம் அதனை காட்டுக்குள் நிரந்தரமாக அனுப்பி வைக்க திட்டமிட்டது வனத்துறை. இதற்காக மூன்று கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு பாகுபலியை சுற்றி வளைக்க வனத்துறையினர் பல முறை முயற்சித்த போதும் யானை பிடிபடாமல் தப்பியது.

இதையடுத்து பாகுபலி யானையை பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் கைவிட்ட நிலையில், பல நாட்களாக யார் கண்களிலும் தென்படாமல் இருந்த பாகுபலி யானை, திடீரென நேற்று இரவு மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த சாலை வழியே உலா வர துவ்கியதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள ஓடந்துறை என்னுமிடத்தில் சாலை வழியே வழக்கம் போல் தன்னந்தனியே நடந்து சென்று அருகில் இருந்த விவசாய தோட்டங்களுக்குள் நுழைய முயன்ற பாகுபலி யானையை பட்டாசுகளை வெடித்து விரட்டிய வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

பாகுபலி மீண்டும் ஊருக்குள் நடமாட்ட துவங்கியுள்ளது வனத்துறையினரையும் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com