பூமி சூடானால் தூக்கம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

பூமி சூடானால் தூக்கம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

பூமி சூடானால் தூக்கம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்
Published on

புவி வெப்பமயமாதலால் மனிதர்கள் உறக்கமும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். 

இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா-சாண்டியாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புவி வெப்பமயமாதல் மற்றும் தூக்கம் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதில், வரும் 2050ம் ஆண்டுவாக்கில் வெப்பத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு 100 இரவுகளிலும் 6 இரவுகள் தூக்கம் இல்லாமல் மனிதர்கள் அவதியுறுவர். இதே எண்ணிக்கை 2099ம் ஆண்டில் 14 இரவுகளாக அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இரவு நேர வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது, இந்த மாற்றமானது 3 இரவுகள் முறையற்றத் தூக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com