காலநிலை மாற்றத்தால் இந்தியா அதிக விளைவுகளை சந்திக்கும்: பில் கேட்ஸ்

காலநிலை மாற்றத்தால் இந்தியா அதிக விளைவுகளை சந்திக்கும்: பில் கேட்ஸ்
காலநிலை மாற்றத்தால் இந்தியா அதிக விளைவுகளை சந்திக்கும்: பில் கேட்ஸ்

இந்தியா உட்பட பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இந்தியா டுடே கான்க்ளேவ் 2021 நிகழ்ச்சியில்  பேசிய பில் கேட்ஸ், “பருவநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகள் அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும். நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. நாம் விஷயங்களைச் சரியாகச் செய்யாவிட்டால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

மேலும், “உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் 51 பில்லியன் டன் கிரீன்ஹவுஸ் வாயுக்களிலிருந்து பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய திட்டங்களை உருவாக்க உதவ வேண்டும். சோலார் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்த கொள்கைகளை வகுக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்".என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com