“ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல்

“ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல்

“ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல்
Published on

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மருத்துவமனை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியான தகவலில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், மருத்துவப்பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஸ்டான்லியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் முற்றிலும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ள அவர், “சீனாவின் வூகானிலிருந்து வந்து கடந்த 13 நாட்களுக்கு மேலாக சென்னையில் பணி நிமிர்த்தமாக தங்கியிருந்த 2 சீனர்கள் எவ்வித உடல்நலக்குறைவும் இன்றி இருந்தனர். எனினும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களை அழைத்து வந்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர்களை கடந்த சனிக்கிழமை காலையே டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டோம்.

இதுதவிர வூகானிலிருந்து மருத்துவம் படித்துவிட்டு வந்த சென்னையை சேர்ந்த மாணவிகளான சகோதரிகள் இருவர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அதில் ஒருவருக்கு இருமல், சளி அதிகம் இருந்தது. மருத்துவ மாணவிகள் அச்சப்படக் கூடாது என்பதால் அவர்களுக்கு நானே கவுன்சிலிங் அளித்தேன். அவர்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில் யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா வார்டில் அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன. 32,700 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 311 என்95 முகக்கவசங்கள், 300 முழு உடல்கவசங்கள் தற்போது கைவசம் உள்ளன. தேவையெனில் கேட்ட சில மணி நேரங்களில் இன்னும் கூடுதலாக உபகரணங்களை கொடுக்க சுகாதாரத்துறை தயாராக உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com