\
தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கு  உடல் எடை பரிசோதனை - இந்த யானைகளுக்கு மட்டும் கிடையாது!

தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை - இந்த யானைகளுக்கு மட்டும் கிடையாது!

தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை - இந்த யானைகளுக்கு மட்டும் கிடையாது!
Published on

தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் உடல் எடை பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி முகாமில் உள்ள யானைகளுக்கு இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் வைத்து உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

வளர்ப்பு யானைக்கு உடல் எடை கூடியிருந்தாலோ அல்லது குறைந்து இருந்தாலோ அதற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றங்கள்செய்யப்படும். மதம் பிடித்த யானைகள், வயதான யானைகள் மற்றும் குட்டி யானைகள் உடல் எடை பரிசோதனைக்கு அழைத்து வரப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com