தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாளை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள 'குலாப் புயல்' இன்று நள்ளிரவு கோபால்பூருக்கும் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல, கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com