அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜனவரியில் அதன் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மனித குலத்திற்கு இயற்கை தந்த மிகப்பெரும் வரங்களில் ஒன்றாக பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகள் திகழ்கிறது. ஆனால் அந்நாட்டில் சுரங்கத் தொழில் மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக காடுகளை அழிக்க அதிபர் சயீர் போல்சனாரோ அனுமதித்து வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அமேசான் காடுகளை அழிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுபற்றி அண்மையில் பிரேசில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 430 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழிக்கப்பட்ட காடுகளின் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம் ஆகும். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com