சென்னை வரை உணரப்பட்ட வளிமண்டல அதிர்வு: காரணம் என்ன?

சென்னை வரை உணரப்பட்ட வளிமண்டல அதிர்வு: காரணம் என்ன?

சென்னை வரை உணரப்பட்ட வளிமண்டல அதிர்வு: காரணம் என்ன?
Published on

தெற்கு பசிபிக் நாடான பூங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டல அதிர்வு சென்னை வரை உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு கேள்விப்பட்டிருப்போம் அது என்ன வளிமண்டல அதிர்வு?

தெற்கு பசுபிக் தீவு நாடான டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக உண்டான வளிமண்டல அதிர்வு சென்னையில் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஹொங்கா - டொங்கா தீவில் 2009ம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து வெளிப்பட்டு எரிமலை தீவை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு எரிமலை வடிவமைப்பு உருவாகி இரண்டு தீவுகளை இணைக்கும் அளவிற்கு லார்வா வெளிப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டோங்கா தீவில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. நாசா ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்றவை டோங்கா எரிமலையின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டன. பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டோங்கா தீவில் இருந்து 10,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னை வரை அதன் வளிமண்டல அதிர்வுகள் உணர்ப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 8 15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை மையத்தில் வளிமண்டல அழுத்த மானி மூலம் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றம் வளிமண்டல அடுக்கில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடல் வெப்பநிலை, வளிமண்டலத்தில் காற்றின் திசை மாறுதல்கள், மேக நகர்வுகள் போன்றவற்றில் தாக்கம் உணரப்படும். இதனால் தற்போதைக்கு அலை மட்டத்திலோ, வளிமண்டல காற்றின் வேகத்தில் சிறிய மாற்றம் ஏற்படும் என்றும், இதன் பாதிப்பு வரும் காலங்களில் வானிலை மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

குறிப்பாக தெற்கு பசிபிக் கடற்பரப்பு எல் நினோ, லா நினோ போன்ற வானிலை மாறுதல்கள் ஏற்பட காரணியாக உள்ளது. இந்நிலையில் அதன் மேற்பரப்பில் தற்போது வளிமண்டல வெப்ப மாறுதல் உருவாகும் எனவும் இதனால் வரும் காலங்களில் வானிலை மாற்றம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com