காய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..!

காய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..!
காய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..!

ஃபுளூ தடுப்பு மருந்தை ஊசியின் உதவியின்றி, வலியின்றி உடலில் செலுத்தக்கூடிய மிக எளிய வழிக்கான பரிசோதனை முயற்சியில் அமெரிக்க எமரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

பொதுவாக காய்ச்சல் வந்தால் ஊசி அல்லது மருந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் இனி மைக்ரோனீடில் வாக்சின் பேட்ச் பிளாஸ்டர் பயன்படுத்தினால் போதும் காய்ச்சல் ஓடிவிடும் என்பது மருத்துவ சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சருமத்தில் ஒட்டுவதன் மூலம் காய்ச்சல் சரியாகிறது. மேலும் இது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என சோதனையில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டரின் பின்புறத்தில் மிகநுண்ணிய 100 மைக்ரோனீடில்களை பொருத்தியுள்ளனர். ஆனால் இது தோலில் எந்த வலியையும் ஏற்படுத்துவதில்லை. தோலில் ஒட்டப்படும்போது அதில் உள்ள மருந்து கரைத்துவிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிளாஸ்திரி மூலம் காய்ச்சலுக்கான மருந்தை உடலுக்குள் செலுத்த முடியும். இந்த மருந்தை குளிரூட்டியில் வைத்திருக்கத் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் மற்றவர் உதவியின்றி தாமே இதை அவர்களது உடலில் ஒட்டிக்கொள்ளலாம். காய்ச்சல் ஏற்படும் போது மணிகட்டுகளில் ஒட்டி கொள்ளலாம். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த தடுப்பூசி மிகவும் பயன்தரும் என கூறப்படுகிறது.

100 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், இந்த பிளாஸ்டரை ஒருமுறை பயன்படுத்தினால் 12 மாதங்களுக்கு காய்ச்சலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என்றும் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com