வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் 'கவிதா' உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் 'கவிதா' உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் 'கவிதா' உயிரிழப்பு
Published on
சென்னை வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. ஐந்து நெருப்புக் கோழிகளும் உயிரிழந்துள்ளன.
கவிதா என்ற 19 வயது பெண் சிங்கம், வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளது. மேலும் பூங்காவில் இருந்த ஐந்து நெருப்புக் கோழிகள், ஒரே நாளில் உயிரிழந்துள்ளன. இறப்பிற்கான காரணம் குறித்து அறிவதற்காக, உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். முடிவுகள் வந்தவுடன், நெருப்புக் கோழிகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com