நம்மை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?

நம்மை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?
நம்மை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?

பொதுவாக மார்ச் மாதத்தில்  புயல் சின்னங்கள் அரிதாகவே ஏற்படும். 1891 முதல் 2020ஆம் ஆண்டுகள் வரையில் அரபிக்கடலில் 2 புயல்களும், வங்காள விரிகுடாவில் 6 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.

இந்திய வானிலை மையம் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மார்ச் 19-ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும். மேலும் மார்ச் 20-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். மார்ச் 21-ல் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இப்புயல் 22-ஆம் தேதி வங்காள தேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு, 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் வரும் 20ம் தேதி வரை அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுதும் கோடை காலம். இந்த காலக்கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படும். 1891 முதல் 2020ஆம் ஆண்டுகள் வரையில் அரபிக்கடலில் 2 புயல்களும், வங்காள விரிகுடாவில் 6 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. இதில் 2 புயல்கள் மட்டுமே கரைகளைக் கடந்தன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ’ஜேம்ஸ்’ விமர்சனம்: புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் ‘ஜேம்ஸா?’ ’கேம்ஸா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com