மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 புதிய வகை நன்னீர் தாவரங்கள் கண்டுபிடிப்பு.!

மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 புதிய வகை நன்னீர் தாவரங்கள் கண்டுபிடிப்பு.!
மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 புதிய வகை நன்னீர் தாவரங்கள் கண்டுபிடிப்பு.!

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விஞ்ஞானிகள் இரண்டு புதியவகை நன்னீர் குழாய் தாவரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

பைப்வார்ட்ஸ் (எரியோகோலன்) என்பது ஒரு நன்னீர் தாவரக் குழுவாகும், இது மழைக்கால சீசனில் ஒரு சிறிய காலத்திற்குள் அதன் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது. இந்த தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்மையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டு புதிய வகை பைப்வார்ட்ஸ் தாவரங்களை கண்டுபிடித்ததாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வகையை சேர்ந்த தாவரங்கள் சிறப்பான மருத்துவ பண்புகளை கொண்டவை. தற்போது மகாராஷ்டிராவில் கண்டெடுக்கப்பட்ட வகைக்கு எரியோகாலன் பர்விசெபலம் என்றும் கர்நாடகாவில் காணப்பட்ட வகைக்கு எரியோகாலன் கராவலென்ஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 111 வகையான பைப்வார்ட்ஸ் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு இமயமலைகளில் உள்ளன.

எரியோகோலன் சினிரியம், புற்றுநோய் எதிர்ப்பு, வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. எரியோகோலன் குயின்காங்குலரே கல்லீரல் நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எரியோகோலன் மடாய்பரென்ஸ் என்பது கேரளாவைச் சேர்ந்த ஒரு பாக்டீரியா எதிர்ப்பு தாவரமாகும். "புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் மருத்துவ பண்புகள் இன்னும் ஆராயப்படவில்லை" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com