2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா?

2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா?
2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா?

இந்த ஆண்டு பூமியின் பல்வேறு பகுதிகளை தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. இதில் பூமி சந்தித்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளாக நியூ கினியாவில் பப்புவா பகுதியும், அடுத்த 9 நாட்களில் மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கமும் ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவாகியுள்ளது.

அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 இருந்தது. இந்த நிலநடுக்கம் 1,100க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. அடுத்தது, இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு 300 உயிர்கள் பலியாகின.

இதே போல், சாலமன் தீவின் மலாங்கோவைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், துருக்கியின் டஸ்ஸ் மாகாணத்தில் 6.1 தீவிர நிலநடுக்கம் மற்றும் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியாவைத் தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் போன்ற சமீபத்திய பேரழிவை உண்டாகியது. 2022ம் ஆண்டில் 7.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் 11 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த ஆண்டு 6.0 மற்றும் 6.9 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவிலும் இந்த மாதம் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தரவுகள் எழுப்பும் கேள்வி ஒன்று தான்..

நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறதா?

யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) கூறுவது, ‘நில அதிர்வு பொறுத்தவரை திடீர் அல்லது தற்காலிக அதிகரிப்பு இயல்பானதுதான். ஆனால் நிலநடுக்கம் அதிகரிப்பதாலும் அல்லது குறைவான நிலநடுக்கங்கள் இருந்தாலும், அடுத்து ஒரு பெரிய பூகம்பம் உடனடியாக இருக்கலாம் என்பதை குறிக்கும். உலகில் தற்போது அதிகமான செயல்திறன் கொண்ட கருவிகள் உள்ளன. அவற்றை வைத்து நிலநடுக்கங்களை சரியாக பதிவு செய்ய முடியும். அதன்படி, ஒவ்வொரு வருடத்திலும் 16 பெரிய பூகம்பங்களை வரும் என கணக்கிடப்படுகிறது. பெரிய பூகம்பங்கள் என்றால் 7 ரிக்டர் அளவில் 15 நிலநடுக்கங்களும், 8.0 அல்லது அதற்கும் அதிகமான அளவு நிலநடுக்கங்களும் அடங்கும். கடந்த 40-50 ஆண்டுகளில், பெரிய பூகம்பங்களின் சராசரி எண்ணிக்கையை சுமார் ஒரு டஜன் முறை தாண்டிவிட்டோம் என்று பதிவுகள் காட்டுகின்றன" என்று USGS கூறுகிறது.

நிலநடுக்கங்களை கணிக்க முடியுமா?

நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்க முடியுமா என்பதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து தெளிவான பதில் இல்லை. இதுவரை, எந்த விஞ்ஞானியாலும் அல்லது நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனத்தாலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (ஆண்டுகளில்) ஒரு குறிப்பிடத்தக்க நில அதிர்வு நிகழ்வு ஏற்படலாம் என்பது வரை மட்டும் தான் விஞ்ஞானிகள் இதுவரை கணிக்க முடிந்தது வருகிறது.

Mega Quakes என்றால் என்ன?

ரிக்டர் அளவுகளில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை தொடும் நிலநடுக்கங்களை கடுமையான நிலநடுக்கம் என்கிறோம். இவ்வாறு இருக்கையில் ரிக்டர் அளவுகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட பூகம்பங்களை தான் மெகா நிலநடுக்கங்கள் என்கிறோம். இருப்பினும், இதுபோன்ற பூகம்பங்கள் நடக்க வாய்ப்பில்லை. 10 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உருவாக்கும் அளவுக்கு எந்த வித்தியாசமும் பூமியில் இல்லை என்று யுஎஸ்ஜிஎஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


இதுவரை மனித வரலாற்றில், பூமி கண்ட மிகப்பெரிய பூகம்பம் மே 22, 1960 அன்று சிலியில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தான். இது பூமி சுற்று பரப்பில் சுமார் 1,000 மைல் நீண்டது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com