\
அமெரிக்காவில் பனிப்புயலால் 1,400 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயலால் 1,400 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயலால் 1,400 விமானங்கள் ரத்து
Published on

அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் வீசிய கடுமையான பனிப்புயலை தொடர்ந்து சுமார் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இவைதவிர மேலும் 647 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. நியூயார்க் நகரின் லாகார்டியா விமானநிலையம் மற்றும் ஜான் எஃப் கென்னடி விமானநிலையங்கள் மற்றும் பாஸ்டன் லோகன் விமானநிலையத்தில் தலா 200 விமனங்கள் ரத்து செய்யப்பட்டன. திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் விமானநிலையத்தில் கடும் குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக வீசிய கடுமையான பனிப்புயலால் சில இடங்களில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்தது. பல மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மக்கள் சாலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com