ரூ.3000 உதவித்தொகையுடன்.. மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை

ரூ.3000 உதவித்தொகையுடன்.. மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை
ரூ.3000 உதவித்தொகையுடன்.. மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை

(கோப்பு புகைப்படம்)

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் திருமுறை இசைமணி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் திருமுறை இசைமணி பட்டத்திற்கான 3 ஆண்டுகள் கால படிப்பு கற்பிக்கப்பட்டு அதற்கு பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த படிப்பிற்கு உண்டான நடப்புக் கல்வி ஆண்டின் ( 2022-2023 ) முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த படிப்பில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை பெற்றோர் கையொப்பத்துடன் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் கோயிலில் ஒதுவாராக பணியாற்ற இப்பயிற்சி தகுதியான ஒன்று என தெரிவித்துள்ள இந்துசமய அறநிலையத்துறை, இப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சில தகுதிகளையும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 13 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாத இந்து மதத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மற்றும் நல்ல குரல்வளமும், சமய தீட்சை பெற்று இருத்தலும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சி படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு , உறைவிடம், சீருடைகள் மற்றும் பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக மாதம் தோறும் 3000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் குறித்த கூடுதல் விவரங்களை www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, கோயில் அலுவலகத்தில் நேரிலோ சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com