நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் விப்ரோ அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப துறையில் நிலவும் மந்த நிலை காரணமாக, பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பல வருடங்கள் அனுபவம் உள்ள மூத்த ஊழியர்களை கூட வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் விப்ரோ தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவை சந்தித்த போதிலும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்த ஊதிய உயர்வை விப்ரோ வழங்கியுள்ளது. ஆப்ஷோர் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள ஊதிய உயர்வை விட குறைவாகவே ஆன்சைட் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விப்ரோ குழுமத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, கடந்த வருடத்தை விட 63 சதவீதம் குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளார்.