உள்துறை அமைச்சகத்திடம் சட்ட முன்வடிவு: நீட் தேர்வில் விலக்கு கிடைக்குமா?
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளது.
தமிழக அரசின் சட்ட முன்வடிவு குறித்து மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களிடம் உள்துறை அமைச்சகம் கருத்து கேட்கும். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டாவை நேற்று சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலன் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பம் மாணவர்களிடம் நிலவி வருகிறது

