+2 முடித்த மாணவர்கள் உயர்க்கல்வியில் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம்? #Video

விண்வெளி ஆராய்ச்சி, இந்திய பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு எந்த படிப்பை தேர்வு செய்யவேண்டும், மேற்படிப்புகள் என்ன உள்ளன, CA, சட்டப்படிப்புகள் படித்தால் எதிர்காலம் உள்ளதா போன்ற கேள்விகளுக்கு அண்ணா பல்கழைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் பதில்!

+2 முடித்தவுடன் எந்த கல்லூரியில் சேர்வது, என்ன படிப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ‘எது படித்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்பதை உணர்த்துவதற்காக, அண்ணா பல்கழைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் சில விஷயங்களை புதிய தலைமுறை வழியாக பகிர்ந்துகொள்கிறார்!

தமிழகத்தில் உயர் படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? அதற்கான கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

Deemed university-யில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் இருப்பதால் அங்கு மாணவர்கள் பயிலலாம். அறிவியல் துறை சார்ந்த படிப்புகளில் பி.இ., பி.டெக், தவிர நிறைய பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) சார்ந்த படிப்புகள் அநேகம் உள்ளன. அவற்றில் என்ன ஒரேயொரு குறை என்றால், ஆசிரியர்கள் மிகக்குறைந்தளவே இருக்கின்றனர்.

எந்தப் படிப்பாக இருந்தாலும், படிக்கும் நேரத்தில் மாணவர்கள் தங்களின் திறமையை சரியாக வளர்த்துக்கொண்டால் வேலை வாய்ப்பானது சரியாக கிடைக்கும்.

இப்போதைய காலகட்டத்தில் சிவில் இன்ஜீனியரிங், மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் மற்றும் எலட்ரிக் எலட்ரானிக் இன்ஜீனியரிங் படித்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. போலவே Artificial Intelligence, Data Science, Machine Learning, Deep Learning, Robotics... இதை எடுத்து படித்தால் சிறந்த எதிர்காலம் உண்டு” என்றார்.

மேலும் பல விஷயங்களை அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அவற்றை வீடியோ வடிவில் கட்டுரையின் தொடக்கத்தில் காண்க!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com