10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகிலுள்ள கொடிவேரியில் பேசிய செங்கோட்டையன் “ 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்வரிடம் கூறியுள்ளோம். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. இம்முடிவுகள் மதிப்பெண்கள் முறையில் வெளிவருமா அல்லது கிரேடு முறையில் வெளிவருமா என்று விரைவில் தெரிவிப்போம். 10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தமிழக முதல்வர்தான் முடிவு செய்வார்” என்றார்

மேலும் “ தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகைகள் வைக்ககூடாது என்று கூறியுள்ளோம். மீறி வைத்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com