தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது.
நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நீட் தேர்வு முடிவடைந்து அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளது. இந்நிலையிலும், தமிழகத்தில் இதுவரை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவில்லை. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் வருகிற 18ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத்துறை புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது