ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்
Published on

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் இன்டர்ன்ஷிப் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் 23%. ஆனால் தமிழகத்தில் அதிகப்பட்டசமாக 46 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மொபைல் போன் எடுத்துசெல்ல தடையேதும் இல்லை.

தமிழகத்தில் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதால் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. இதனால் கல்லூரிகள் நடத்துபவர்கள் பழைய முறையை கேட்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள். 45-50 நாட்கள் வரை ஒரு செமஸ்டர் தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் நேரம் விரயம் ஆகிறது. வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com