தமிழ் துறையில் படித்தால் என்னென்ன வேலை கிடைக்கும்? - மாணவர்களின் கேள்விகளுக்கு முனைவரின் விளக்கம்

தமிழ் துறை சார்பாக என்னென்ன படிப்புகள் இருக்கின்றன. ஏதிர்காலத்திலும் தற்போதும் அதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குனர் முனைவர் உலகநாயகி பழனி வழங்கிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

தமிழ் துறை இதற்கு முன்பாக எப்படி இருந்தது. இப்போது தமிழ் துறை மீது மாணவர்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?

10, 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வகுப்புக்கு மாணவர்கள் வருகிறபோது, நல்ல தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு வந்தார்கள். தமிழ் இலக்கியம் வாழ்க்கையை தருகிறது. வாழிவியல் சிந்தனையை தருகிறது. தமிழ் படித்தால் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்ற எண்ணத்தோடு மாணவர்களை பார்த்திருக்கேன். ஆனால், இன்றைக்கு இருக்கிற மாணவர்கள். பள்ளியிலேயே நல்ல தமிழை ஒழுங்காக கற்றுக் கொள்வதில்லை.

tamil
tamilpt desk

இது ஆசிரியர் குற்றமா? பெற்றோர் குற்றமா? மாணவர் குற்றமா? என்ற ஆய்வுக்குப் போவதற்கு முன்பு, தாய் மொழியாம் தமிழ் மீது ஒரு தன்னிகரில்லாத பற்று இருக்க வேண்டும். அந்த பற்றோடு வீட்டில் தமிழ் பேச வேண்டும். பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையிலாவது தமிழ் படிக்க வேண்டும். அப்படி பத்தாம் வகுப்பு வரை கூட தமிழ் படிக்கவில்லை என்றால் அவர்களின் தலைமுறைக்கு எப்படி தமிழ் சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது இருக்கும் குழந்தைகள் தமிழ் வகுப்பு என்று கூட சொல்வதில்லை. மாறாக Tamil Class என்று சொல்கிறார்கள். தமிழ் வகுப்பு என்பதை மாணவர்கள் மனதார உச்சரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

தந்தை மீதும் தாய் மீதும் பற்றிருப்பது போலவும், குடும்பத்தில் பற்றிருப்பது போலவும் நம் மொழி மீது நம் இனத்தின் மீது நம் இலக்கியத்தின் மீது பற்றிருக்க வேண்டும். அந்த காலத்தில் தமிழ் மீது இருந்த பற்று காரணமாக தமிழ் மொழியை ஆசையோடு கற்க வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்த நிலைப்பாடு மாற என்ன காரணமென்றால், பத்தாம் வகுப்பு வரை எத்தனையோ பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுப்பதில்லை. தாய் மொழி தமிழாக இருந்தாலும் பள்ளிகளில் தமிழ் படிக்க முடியாது. இதனால் மாணவர்களுக்கு தமிழ் மீதான பற்று குறைந்துவிட்டது.

மேலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்களை கீழே உள்ள வீடியோவில் கண்டறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com