கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் கால்நடை உதவி மருத்துவர் என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
கால்நடை உதவி மருத்துவர் (Veterinary Assistant Surgeon)
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,141 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 18.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2019
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 19.12.2019
முதல் தாளுக்கான தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020 (காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை)
இரண்டாம் தாளுக்கான தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020 (மதியம் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை)
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.55,500 முதல் அதிகபட்சமாக ரூ.1,75,700 வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
குறிப்பு: வயது தளர்வும் உண்டு
தேர்வுக்கட்டணம்:
1. நிரந்த பதிவு முறையில் பதிவு செய்ய கட்டணம் - ரூ.150
2. தேர்வுக்கான கட்டணம் - ரூ.200
கல்வித்தகுதி:
கால்நடை உதவி மருத்துவர் என்ற பணிக்கு, இளங்கலைப் பட்டப்படிப்பில் (B.V.Sc., & A.H.,) கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிப்போர் ஆன்லைனில், டிஎன்பிஎஸ்சியின் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத் தேர்வு
மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg_new.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.