பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை!
Published on

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஊர் காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (07.02.2019) மற்றும் நாளை மறுநாள் (08.02.2019) ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் இருக்கும் ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் பெற முக்கிய தகுதிகள்:

1. வயது: 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி (Pass) அல்லது தோல்வி (Fail) அடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
3. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15.02.2019.
4. விண்ணப்பம் பெற வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
5. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
காவல் உதவி ஆய்வாளர், 
ஊர் காவல் படை அலுவலகம், 
அண்ணாசாலை, 
வேலூர் மாவட்டம் - 632001. 

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபாலிலோ, 15.02.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com