மதுரை | களைகட்டிய புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி!

மதுரையில் புதிய தலைமுறை மற்றும் PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" நிகழ்ச்சியில் சிறந்த படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானிபுதிய தலைமுறை
Published on

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

மதுரையில் புதிய தலைமுறை மற்றும் PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" நிகழ்ச்சியில் சிறந்த படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி

மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி துணைப் பதிவாளர் விஜய்சிவகாசி நாடார் பள்ளியின் தலைவர் சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 60 க்கும் பள்ளிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 500 மேற்பட்ட புதிய அறிவியல் படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி காட்சிப் படுத்தியிருந்தனர்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி

இந்த நிகழ்ச்சியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் ஜூனியர் பிரிவிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்று தங்களது புதிய படைப்புகளை காட்சிப் படுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் அன்று மாலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிக் குழும உறுப்பினர்களால் நினைவுக் கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி

சீனியர் பிரிவில் சிவகாசி நாடார் மெட்ரிக் மேல் நிலை பள்ளியை சேர்ந்த C. Akilesh என்ற மாணவன் முதல் இடத்தை பெற்றார். ஜூனியர் பிரிவில்  மகாத்மா மாண்டிசோரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் Ahyan மற்றும்  Mithun முதல் இடத்தை பெற்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com