முப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?

முப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?
முப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில், அதிகாரி பணிகளுக்கான (Combined Defence Services Examination - 2020) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: (Combined Defence Services Examination - 2020)
முப்படை பிரிவு அதிகாரி

காலியிடங்கள்:

மொத்தம் = 418 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2019, மாலை 06.00 மணி
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 18.11.2019, இரவு 11.59 மணி
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 19.11.2019, மாலை 06.00 மணி
தேர்வு நடைபெறும் தேதி: 02.02.2020

வயது வரம்பு:

குறைந்தபட்சமாக, 20 வயது முதல் அதிகபட்சமாக 24 அல்லது 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 

தேர்வுக்கட்டணம்: ரூ.200

குறிப்பு:

பெண்கள், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் (B.E or Any Degree) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.upsc.gov.in/ (அல்லது) http://upsconline.nic.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

1. எழுத்துத் தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு
4. நேர்முகத் தேர்வு

பயிற்சி காலங்கள்: 49 வாரங்கள்

பயிற்சிக்கு முடிவுக்குப் பின், ‘Post Graduate Diploma in Defence Management and Strategic Studies’ என்ற சான்றிதழ் சென்னை பல்கலைக் கழகத்திலிருந்து வழங்கப்படும். அதற்குப் பின்பு திறமைக்கேற்ப பணியும், ஊதியமும் வழங்கப்படும். 

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CDSI2020-Engl-Final.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com