\
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான புதிய தேர்வு தேதி அறிவிப்பு

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான புதிய தேர்வு தேதி அறிவிப்பு

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான புதிய தேர்வு தேதி அறிவிப்பு
Published on

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரிகள் பதவிக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 28 முதல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com