நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!
Published on

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே போல உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதம் 42.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதாவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது, குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 407 மில்லியனாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 397 மில்லியனாக குறைந்துள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை 2.4 சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 21.6 மில்லியனாக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 12 மில்லியன் மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com