ஒத்திவைக்கப்படும் தேர்வுகள்: உக்ரைனில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு தேர்வில் சலுகை!
உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு படித்து வரும் மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் அந்நாட்டு அரசு சலுகை அளித்துள்ளது.
உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் போர் நீடிப்பதால் தங்கள் படிப்பின் எதிர்காலம் குறித்து மாணவர்கள் அஞ்சியிருந்தனர். இந்நிலையில் அவர்களை ஆறுதல் படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 3ஆம் ஆண்டு மாணவர்கள் எழுத வேண்டிய கிராக் 1 எனப்படும் தகுதித் தேர்வு அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5ஆம் ஆண்டு மாணவர்கள் கிராக் 2 தகுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிராக் தகுதித்தேர்வு எழுதி அதில் வெல்லும் மாணவர்கள் மட்டுமே அடுத்தாண்டு வகுப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த சலுகை பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: கடந்த 2 ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்கியதால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?