\
யுஜிசி நெட் தேர்வு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு

யுஜிசி நெட் தேர்வு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு

யுஜிசி நெட் தேர்வு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு
Published on

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித்தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமை ஆண்டுதோறும் உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்திவருகிறது.

வழக்கமாக நெட் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், நெட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பாடவாரியான அட்டவணை, நேர அட்டவணை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com