உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?
உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?

இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professor)
2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF)

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரை
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 10.10.2019, இரவு 11.50 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதிகள்: 02.12.2019 முதல் 06.12.2019 வரை

வயது வரம்பு: (01.12.2019 அன்றுக்குள்)
1. இளம் ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

2. உதவிப் பேராசிரியர் (AP) என்ற பணிக்கு, அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வுக்கட்டணம்:
1. பொதுப் பிரிவினர் / Un Reserved - ரூ.1,000
2. EWS / OBC - NCL - ரூ.500
3. SC / ST / PwD / Transgender - ரூ.250

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
கல்லூரியில் கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://ugcnet.nta.nic.in அல்லது https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx போன்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://ugcnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=18&iii=Y - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com