\
இனி நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - யுஜிசி அறிவிப்பு

இனி நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - யுஜிசி அறிவிப்பு

இனி நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - யுஜிசி அறிவிப்பு
Published on

நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படவேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருக்கிறது.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் மூலம் இதை அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்தவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் இனி நேரடி தேர்வுகள்தான் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நேரடி எழுத்துத்தேர்வுகளே நடைபெறும் என யுஜிசி செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com