யுஜிசி நெட்(ஜுன்-2019) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா?

யுஜிசி நெட்(ஜுன்-2019) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா?

யுஜிசி நெட்(ஜுன்-2019) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா?
Published on

உதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் ஆகியவற்றிற்கான யுஜிசி - நெட் தகுதித் தேர்வு ஜூன் 2019-இல் நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. இரண்டு தாள்களுக்குமான தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். 

பணிகள்:
உதவி பேராசிரியர்

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2019
தேர்வுக்கான நுழைவுத்தாளை பதிவு செய்ய வேண்டிய நாள்: 15.05.2019
தேர்வு நடைபெறும் நாட்கள்: 20,21,24,25,26,27 மற்றும் 28 ஜூன் 2019
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 15.07.2019

கல்வித்தகுதி:
யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பயின்று, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
https://www.nta.ac.in/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள்:
தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களை பெற, https://www.ugcnetonline.in/syllabus-new.php - என்ற இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், இது குறித்த தகவல்களைப் பெற, 
(https://www.nta.ac.in/Download/Notice/PublicNoticeUGC-NETJUNE-2019.pdf) மற்றும் (https://ntanet.nic.in/NTANETCMS/Handler/FileHandler.ashx?i=File&ii=21&iii=Y)- என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com