நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி

நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி
நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசியக் கல்விக்கொள்கையின் ஒரு அம்சமான ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்குவதாக இருக்காது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு என்சிஇஆர்டி கல்வி முறையின் கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, மாநிலக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களை பெருமளவு பாதிக்கும்.

இதனால் டெல்லி பல்கலை., ஜேஎன்யு உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. சமூக, பொருளாதார வேலைவாய்ப்பில் சமமற்ற வளர்ச்சி உள்ள ஒரு நாட்டில், பொது நுழைவுத் தேர்வு என்பது சமமான வாய்ப்பை வழங்காது. அதுமட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பில் நுழைவுத் தேர்வு நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. எனவே, தமிழக மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை பாதிக்கும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com