முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு – விண்ணப்பிக்க செப்.16 கடைசி தேதி

முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு – விண்ணப்பிக்க செப்.16 கடைசி தேதி

முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு – விண்ணப்பிக்க செப்.16 கடைசி தேதி
Published on

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16ஆம் தேதி கடைசி நாள்.

இந்த பட்டய படிப்புக்கு முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு பயிலுதவித் தொகையாக மாதம் 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழை பயிற்றுமொழியாக கொண்ட இந்த படிப்பிற்கு 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

www.tnarch.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 16/09/2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com