சுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு

சுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு
சுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் குவாலியர், புவனேஸ்வர், கோவா, நொய்டா, நெல்லூர், போத் கயா மற்றும் ஷில்லாங் போன்ற இடங்களில் செயல்படும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.டி.எம் (IITTM) எனப்படும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டூரிசம் அண்ட் ட்ராவல் மேனேஜ்மெண்ட். இக்கல்வி நிறுவனம், மத்திய பிரதேச மாநிலம் அமர்கண்டாக்கில் உள்ள இந்திராகாந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக் கழகத்தோடு இணைந்து பிளஸ்-டூ முடித்த மாணவர்களுக்கு பி.பி.ஏ (BBA) - டூரிசம் அண்ட் ட்ராவல் எனும் இளநிலைப் பட்டப்படிப்பையும், இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு எம்.பி.ஏ (MBA) - டூரிசம் மற்றும் ட்ராவல் மேனேஜ்மெண்ட் எனும் முதுநிலை படிப்பையும் நடத்தி வருகிறது. 

இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர IGNTU IITTM Admission Test - எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்புகள்:
1. பி.பி.ஏ - டூரிசம் அண்ட் ட்ராவல்: மூன்று வருட படிப்பு (2019 - 22) 
2. எம்.பி.ஏ - டூரிசம் மற்றும் ட்ராவல் மேனேஜ்மெண்ட்: இரண்டு வருட படிப்பு (2019 - 21)

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2019
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 09.06.2019

நுழைவுத்தேர்வுக் கட்டணம்:
1. பி.பி.ஏ: 

பொது பிரிவினர் - ரூ.1,000
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.500

2. எம்.பி.ஏ: 
பொது பிரிவினர் - ரூ.1,000
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.500

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

வயது வரம்பு:
1. பி.பி.ஏ: அதிகபட்சமாக 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2. எம்.பி.ஏ: அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
1. பி.பி.ஏ: பிளஸ்-டூ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. எம்.பி.ஏ: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.முதுநிலைப் படிப்பில் சேர விரும்புவோர் பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

குறிப்பு:
1. இறுதி ஆண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2. ஏற்கனவே MAT, CAT, CMAT, XAT, GMAT, ATMA  தேர்வு எழுதியவர்கள் பொது நுழைவுத்தேர்வை எழுதத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://fdsbase.com/iittm/apply-online.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு முறை:
1. நுழைவுத்தேர்வு
2. குழு விவாதம் 
3. நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குறிப்பு:

இங்கு படித்து முடிப்பவர்களுக்கு இந்தியன் ரயில்வே, ஜெட் ஏர்வேஸ், ஷெரட்டன் ஹோட்டல்ஸ், தாமஸ் குக், மேக் மை ட்ரிப்.காம், யாத்ரா.காம் போன்ற நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்க சாத்தியங்கள் உள்ளன.

இது குறித்த பல்வேறு தகவல்களைப் பெற,
http://www.iittm.ac.in/ - என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com