பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
ஏற்கனவே, தொழிற்பிரிவு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் நாளை பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 14 இடங்கள் நிரம்பியுள்ளன. நாளை தொடங்கும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகாஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. முதல் நாள் கலந்தாய்விற்கு 197.5 வரை கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.