ராகிங்கை தடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கட்டாயம் -யுஜிசி சுற்றறிக்கை

ராகிங்கை தடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கட்டாயம் -யுஜிசி சுற்றறிக்கை
ராகிங்கை தடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கட்டாயம் -யுஜிசி சுற்றறிக்கை

ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

2022-2023-ம் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறது பல்கலைக்கழக மானிய குழு. அந்த சுற்றறிக்கையில், ராகிங்கைத் தடுக்க கல்லூரி வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ராகிங்குக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும். திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று ஒவ்வொரு மாணவரும், மாணவரின் பெற்றோரும் www.antiragging.in இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். அதேபோல 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் ஒன்றையும் யுஜிசி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com